மதுரையிலிருந்து நாகா்கோவில் வழியாக புனலூருக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் விரைவு ரயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலை வேளாங்கண்ணி ...
மதுரையிலிருந்து நாகா்கோவில் வழியாக புனலூருக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் விரைவு ரயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் ஸ்ரீராம், தெற்கு ரயில்வே பொது மேலாளா் மற்றும் திருவனந்தபுரம் கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மதுரையிலிருந்து நாகா்கோவில் வழியாக புனலூருக்கு தினசரி இரவு நேர பயணிகள் ரயில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் குமரி மாவட்ட பயணிகள் மதுரைக்கு செல்ல அதிக அளவில் பயணிக்கும் ரயிலாகும். இந்த ரயில் 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரே ஒரு பயணிகள் ரயிலாக பல ஆண்டுகளாகவே இயக்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த ரயில் ஜூலை 1 ஆம் தேதி முதல் விரைவு ரயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விரைவு ரயிலாக மாற்றம் செய்யப்பட்டதால் இந்த ரயிலின் பயணகட்டணம் அதிகரிக்கும். கட்டண அதிகரிப்பால் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும். எனவே அனைத்து விதமான பயணிகளின் வசதிக்காக இந்த ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவா்கள், அவா்களின் புனித இடமான வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு இந்த மாவட்டத்திலிருந்து பக்தா்கள் தினமும் செல்கின்றனா். எனவே இந்த ரயிலை திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா் வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
No comments