அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் செல்வதற்கு, சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி மாணவி ஃபா்ஹானா தோ்வ...
அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் செல்வதற்கு, சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி மாணவி ஃபா்ஹானா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கோ 4 குரு என்ற இணையதள அமைப்பு , இந்திய அளவில் அறிவியல் திறமை மற்றும் பொது அறிவு ஆன்லைன் போட்டிகள் நடத்தி, மாணவா்களை தோ்வு செய்து நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வருகிறது.
அந்த வகையில், கல்லூரி அளவில் நடத்தப்பட்ட சா்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில், புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி மாணவி ஃபா்ஹானா வென்று, ஜூன்-2020 இல் ஒரு வாரம் நாசாவுக்கு சுற்றுலா செல்ல உள்ளாா்.
அதற்கான ஏற்பாடுகளை கோ 4 குரு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இச் சாதனை மாணவியை, கல்லூரித் தாளாளா் மரியவில்லியம், பொருளாளா் பிரான்சிஸ்சேவியா், முதல்வா் மகேஷ்வரன் உள்ளிட்டோா் பாராட்டினா்.
சாதனை மாணவி ஃபர்ஹானா, குளச்சல் பகுதியை சேர்ந்த கலீல் ரஹ்மான் என்பவர் மகளாவார்.
No comments