தெலங்கானாவில் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இல்லாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க, அந்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு ...
தெலங்கானாவில் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இல்லாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க, அந்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.

இதுபற்றி தெலங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் காரணமாக தெலங்கானாவில் தேர்வுகள் நடத்த சாத்தியமில்லை. இதன் காரணமாக, 10-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இல்லாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.
அக மதிப்பீட்டு மதிப்பெண்கள்படி கிரேடுகள் வழங்கப்பட்டு, 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருமே அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முதல்வர் முடிவெடுத்துள்ளார்.
No comments