மும்பையில் வணிக வளாகம் ஒன்றில் இயங்கி வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மும்பை பாந்தூப் பகுதியில் உள்ள 5 அடுக்க...
மும்பையில் வணிக வளாகம் ஒன்றில் இயங்கி வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
மும்பை பாந்தூப் பகுதியில் உள்ள 5 அடுக்கு வணிக வளாகமான ட்ரீம்ஸ் மாலில் 'சன்ரைஸ்' என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது.

அந்த மருத்துவமனை 3ஆவது தளத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் 78 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களில் பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தது.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 70 நோயாளிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, வேறுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட மும்பை மேயர், வணிக வளாகத்தில் மருத்துவமனை செயல்பட்டு வருவது ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது என்று கூறினார். மேலும் இதில் விதிமீறல் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும், அது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
No comments