ஜூன் 21ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்ற...
ஜூன் 21ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா தொற்றின் 2-வது அலையை எதிர்கொள்ள, விரைவாக மருத்துவ கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறினார். ஆக்சிஜன், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டப் போதிலும், அதனை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கொரோனாவைத் தடுக்க தடுப்பூசியே முக்கிய ஆயுதம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி பல லட்சம் மக்களின் உயிரை காப்பாற்றி இருப்பதாக பெருமிதம் தெரிவித்த அவர், மூன்று புதிய தடுப்பூசிகளுக்கான சோதனைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
குழந்தைகளுக்காக தனி தடுப்பூசி தயாரிக்கப்படுவது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், தடுப்பூசி தொடர்பான மாநில அரசுகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். மருந்து உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து அதனை மாநில அரசுக்ளுக்கு இலவசமாக வழங்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
ஜூன் 21ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தீபாவளி வரை ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்தார்.
No comments