10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியக் கால்பந்து தீபத்தை ஏற்றிச் சென்று கொண்டிருப்பவர் சுனில் சேத்ரி, நேற்று வங்கதேசத்துக்கு எதிராக உலகக்கோப்பை தக...
10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியக் கால்பந்து தீபத்தை ஏற்றிச் சென்று கொண்டிருப்பவர் சுனில் சேத்ரி, நேற்று வங்கதேசத்துக்கு எதிராக உலகக்கோப்பை தகுதிச் சுற்று கால்பந்துப் போட்டியில் 2 கோல்களை அடித்து இந்திய அணியின் அபார வெற்றிக்குக் காரணமானதோடு, 2022 உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் முதல் வெற்றியைப் பெற்றுத்தந்தார்.

ஆனாலும் இந்திய அணிக்கு இது மிக மோசமான உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுத் தொடராக அமைந்தது. உலகக்கோப்பை தகுதி வாய்ப்பை ஏற்கெனவே இழந்த நிலையில் இந்த வெற்றி ஆறுதல் வெற்றி மட்டுமே.
பிபா உலகக்கோப்பைக் கால்பந்து தொடர் 2022-ல் கத்தாரில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆசிய அணிகளின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி உலகக்கோப்பை தகுதி வாய்ப்பை இழந்து விட்டது.
இந்நிலையில் நேற்று தோகாவில் தரவரிசையில் 104வது இடத்தில் இருக்கும் இந்திய அணி 184வது இடத்தில் இருக்கும் வங்கதேச அணியை சந்தித்தது. 11வது நிமிடத்தில் பிபின் சிங் கொடுத்த பாஸை தலையால் முட்டி கோலாக்க முயன்றார் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி. 20வது நிமிடத்தில் உதாண்டா சிங் அடித்த ஷாட் கோலிலிருந்து விலகிச் சென்றது.
35வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பு கிடைக்க பிரண்டன் பெர்னாண்டஸ் அடித்த ஷாட்டை தலையால் முட்டி கோலுக்குள் திணிக்க முயன்றார் மீண்டும் சுனில் சேத்ரி ஆனால் வங்கதேசம் தடுத்து விட்டது. முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியிலும் 63வது நிமிடத்தில் சுனில் சேத்ரியின் ஹெடிங் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இப்படியே போய்க்கொண்டிருந்த ஆட்டத்தில் 79வது நிமிடம் இந்திய அணிக்கு பிரேக் கிடைத்தது, ஆஷிக் ரூனி அடித்த பந்தை சுனில் சேத்ரி தலையால் முட்டி கோலாக மாற்றினார். 4 போட்டிகளுக்குப் பிறகு இவர் அடித்த முதல் கோல் ஆகும் இது. பிறகு 92வது நிமிடத்தில் சுனில் சேத்ரி 2வது கோலை அடித்தார். வலது புறம் சுரேஷ் சிங் கொடுத்த பந்தை கோலாக மாற்றினார். இந்தியா 2-0 என்று வெற்றி பெற்றது.
இது வரை 7 போட்டியில் ஒரு வெற்றியைத்தான் இந்தியா பெற்றுள்ளது. 3 தோல்வி, 3 ட்ராக்களுடன் பட்டியலில் 3ம் இடத்துக்கு முன்னேறியது. அடுத்த ஒரே வாய்ப்பு இந்திய அணிக்கு ஜூன் 15ம் தேதி ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால் ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றின் 3வது சுற்றுக்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது.
கடைசியாக 2015ல் கயாம் அணிக்கு எதிராக இந்திய அணி உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் வென்றது. 6 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பைத் தகுதி சுற்றில் இப்போது வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது.
மேலும் அயல்நாட்டு மண்ணில் தகுதிச் சுற்றுப் போட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வெற்றியை இந்தியா ஈட்டியுள்ளது.
No comments