Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

பல்கலைகழகங்களில் எம்ஃபில் பட்டப்படிப்பு இனி கிடையாது.. UGC அறிவிப்பு..!!

அனைத்து பல்கலைக் கழகங்களிலும் நடத்தப்பட்டு வரும் 'எம்ஃபில்.' (MPhil ) பட்டப் படிப்பு 2022-2023ம் கல்வி ஆண்டு முதல் செல்லாது என்றும்,...

அனைத்து பல்கலைக் கழகங்களிலும் நடத்தப்பட்டு வரும் 'எம்ஃபில்.' (MPhil ) பட்டப் படிப்பு 2022-2023ம் கல்வி ஆண்டு முதல் செல்லாது என்றும், அடுத்த கல்வி ஆண்டு முதல் எம்.பில். பட்டப் படிப்பை நிறுத்திவிடவும் பல்கலைக் கழக மானியக்குழு திட்டமிட்டுள்ளது.
பல்கலைக் கழகங்களில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் அடுத்ததாக எம்ஃபில் என்ற பட்டப்படிப்பை முடித்தால் தான் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதியாக வைக்கப்பட்டது. கடந்த 1977ஆம் ஆண்டு முதல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது எம்.பில்.
ஆசிரியர் பணியில் இருப்போர், முதுநிலைப் பட்டத்துக்கு பிறகு எம்ஃபில் பட்டம்பெற்றிருந்தால், அவர்களுக்கு ஊக்கத்தொகையும் பெற வசதியாகவும் எம்.பில் பட்டம் இருந்தது.

இந்நிலையில் தான் பல்கலைக் கழக மானியக் குழு இந்த முறையை தற்போது மாற்றி, ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச தகுதியை கொண்டு வந்துள்ளது. இதன்காரணமாக எம்ஃபில் பட்டம் எந்த கற்பித்தல் பணிக்கும் தகுதியற்றதாக தற்போது மாற்றியுள்ளது.
அதாவது, பல்கலைக் கழக மானியக் குழுவின் முனைவர் பட்டம் (பிஎச்டி) வழங்குவதற்கான குறைந்த பட்ச தரம் மற்றும் விதிகளுக்கான மசோதா) ஒழுங்குமுறைகள் 2022ம் ஆண்டுக்கானது இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளபடி அடுத்த கல்வி ஆண்டில் எம்ஃபில் பட்டம் என்பது இருக்காது. 

இந்த அறிவிப்பு வரை வழங்கப்பட்ட எம்.பில்., பட்டங்கள் செல்லுபடியாகும். சென்னைப் பல்கலைக் கழகம் கடந்த ஆண்டே எம்ஃபில் பட்டப்படிப்பை நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்