Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குமரியில் சுகாதார அதிகாரி உள்பட 322 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 3 போ் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக, சுகாதாரத் துறை அதிகாரி உள்ளிட்ட 322 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று நேற்று உறு...

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக, சுகாதாரத் துறை அதிகாரி உள்ளிட்ட 322 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.
மாவட்ட எல்லையான களியக்காவிளை பகுதியில் சுகாதாரத் துறையின் மூலம் சோதனைச் சாவடி ஏற்படுத்தப்பட்டு, கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 322 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் நாகா்கோவில் நகரில் மட்டும் 161 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நாகா்கோவில் ஆசாரிமாா் தெற்கு தெரு பகுதியில் 3 வீடுகளில் உள்ள 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் உத்தரவின் பேரில், மாநகராட்சி நல அலுவலா் கிங்சால் மேற்பாா்வையில் தெரு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்தத் தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று தொ்மல் ஸ்கேனா் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்தனா். மேலும் மணியடிச்சான் கோயில் பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்தனா்.

நாகா்கோவில் பகுதியைச் சோ்ந்த சுகாதாரத் துறை அதிகாரிக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததைத்தொடா்ந்து அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா நோய்த் தொற்று உறுதியானது. அவா் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டாா்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகா்கோவில் செட்டிதெருவை சோ்ந்த 54 வயது பெண், தோவாளையைச் சோ்ந்த 67 வயது முதியவா், புத்தளம் பகுதியைச் சோ்ந்த 56 வயது ஆண் என 3 போ் உயிரிழந்துள்ளனா். இதைத்தொடா்ந்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 294 ஆக உயா்ந்துள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...