பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படும் நமீதா, மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிக்பாஸ் ...
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படும் நமீதா, மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 5வது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் கலந்துக்கொண்டார். இதற்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். முதல் நாளிலிருந்து போட்டியாளர்கள் தங்களை அறிமுகப்படுத்தி வந்தனர்.
அந்த வகையில் திருநங்கை நமிதா மாரிமுத்து, தனது வாழ்க்கையில் நடந்தவற்றை கண்ணீருடன் சொல்லி, போட்டியாளர்களை அழுத வைத்தார். இந்த சமுதாயத்தில் எல்லாரும் திருநங்கைகளை பாலியல் தொழில் செய்பவராகவும், பிச்சை எடுப்பவர்களாகவும் தான் பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் பெத்தவங்க மட்டுமே. வேறு யாருமே காரணம் இல்லை. எங்களை மாறுங்க மாறுங்க என சொல்லறீங்க. ஆனா நாங்க எப்பவோ மாறிட்டோம். நீங்கள்தான் மாறன்னும் என கதறி கதறி அழுதபோது சக போட்டியாளர்கள் கண்களில் கண்ணீர் வடிந்தது. இதனால் நமீதாவுக்கு ஏகப்போக வரவேற்பு கிடைத்தது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியனார். இதற்கு காரணம், தாமரையுடன் ஏற்பட்ட தகராறால், ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார் என்றும், மருத்துவ காரணங்களால் வெளியேறினார் என்றும் தகவல் பரவியது. ஆனால் உண்மையாக காரணம் என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில் நமீதா குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நமீதா மாரிமுத்து, இன்னமும் பிக்பாஸ் செட்டில் தான் இருக்கிறாராம். அவர் விரைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி கொடுக்க போகிறாராம். முதல் வைல்டுகார்டு என்ட்ரியாக ஷாலு ஷம்மு வருவதாக கூறப்பட்டது. ஆனால் நமீதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது ரசிகர்களிடையே அதிப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். அதனால் மீண்டும் நமீதாவை ரீ என்ட்ரி கொடுக்க வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments