பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு நிகழ்ச்சி தொகுப்பா...
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக பயணத்தை தொடங்கிய இவர் ஜெயா டிவி, சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என பல்வேறு தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். இவருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அடுத்த சில மாதங்களில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் சென்னையை அடுத்த நசரத் பேட்டையில் தனியார் விடுதியில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது வருங்கால கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த போது இந்த விபரீதி முடிவை எடுத்துள்ளார். அதிகாலை படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பிய பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments