கன்னியாகுமரி பார்லி., இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் ஒரு லட்சம் போஸ்ட் கார்டு அனுப்பும் நிகழ்ச்சி...
கன்னியாகுமரி பார்லி., இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் ஒரு லட்சம் போஸ்ட் கார்டு அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

கன்னியாகுமரி பார்லி., தொகுதியில் எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் உயிரிழந்ததை தொடர்ந்து இத்தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இங்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் சீட் பிடிக்க பல்வேறு முக்கிய பிரமுகர்கள் காய் நகர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என தலைமைக்கு காங்., சார்பில் ஒரு லட்சம் போஸ்ட் கார்டுகள் அனுப்பும் நிகழ்ச்சி குழித்துறையில் நடந்தது.
இளைஞர் காங்., முன்னாள் மாவட்டத்தலைவர் ரமேஷ்குமார் நிர்வாகிகள் ஜோசப்தயாசிங், ராஷிக், ஷாஜி, ஷர்மிளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments