திருச்சி மாநகரில் ஸ்பா சென்டர் என்ற பெயரில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி போலியாக மசாஜ் சென்டர் நடத்தி வரும் குற்றவாளிகளை பிடிக்க மாநகர போ...
திருச்சி மாநகரில் ஸ்பா சென்டர் என்ற பெயரில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி போலியாக மசாஜ் சென்டர் நடத்தி வரும் குற்றவாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவு விட்டார். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் உறையூர் அண்ணாமலை நகர், தில்லைநகர், டிவிஎஸ் டோல்கேட் ஜி கார்னர்சாலை ஆகிய இடங்களில் தனிப்படையினர் சோதனை செய்ததில், ஸ்பா மையம் என்ற போலியான பெயரில் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து ஏழ்மையில் உள்ள பெண்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா என அழைக்கப்படும் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்த வாழவிநாயகம் மனைவி சூர்யா(எ)சுப்புலெட்சுமி(34), புதுகை மாவட்டம் கீரனூர், மேலபதுவயல் வெள்ளாளர் தெரு புரோக்கர் தினேஷ்(24) உள்பட 2 பெண்கள், 8 ஆண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட 12 பெண்களும் பிடிபட்டனர்.
இது தொடர்பாக உறையூர், கே.கே.நகர், தில்லைநகர் மற்றும் விபசார தடுப்பு பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சூர்யா(எ)சுப்புலெட்சுமி, புரோக்கர் தினேஷ் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பாதிக்கப்பட்ட 12பெண்கள் மீட்கப்பட்டு அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
No comments