20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது . இதை...
20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது .

இதையடுத்து, சீனாவில் இருந்து அபுதாபிக்கு தடுப்பூசி மருந்துகள் கொண்டு வர அபுதாபியில் எதிகாத் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777-300 இ.ஆர். என்ற சரக்கு விமானம் ஏற்பாடு பண்ணப்பட்டது .
இந்த விமானத்தில் வெப்பநிலையை தக்க வைத்து கொள்ள பிரத்யேக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சீனாவின் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 20 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக சிறப்பு விமானத்தில் ஏற்றப்பட்டு அபுதாபி வந்தடைந்துள்ளது.
No comments