Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

இஸ்ரேலில் புதிய பிரதமராக நெஃப்டாலி பென்னட் (Naftali Bennett): நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வு

இஸ்ரேலில் புதிய பிரதமராக நெஃப்டாலி பென்னட் பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் நெதன்யாகுவின் 12 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது. இஸ்ரேலில் கடந்த ...

இஸ்ரேலில் புதிய பிரதமராக நெஃப்டாலி பென்னட் பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் நெதன்யாகுவின் 12 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.
இஸ்ரேலில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக இருந்து வந்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி 30 இடங்களில் வென்றது.
தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதும், அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது. இதற்கிடையே, அங்குள்ள 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாய் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன. அதன்படி 8 கட்சிகள் கூட்டணி ஒன்றிணைந்து பெரும்பான்மை எண்ணிக்கையை தொட்டன.
இந்த கூட்டணியை யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் அறிவித்தார். சுழற்சி முறையில் பிரதமர் பதவி தொடரும் என்றும், முதலில் யமினா கட்சியின் தலைவரான நப்தலி-பென்னட் (49), பிரதமர் பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் யமினா கட்சி தலைவர் நப்தலி பென்னட் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தலி பென்னட் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் 9 பெண்கள் உட்பட 27 பேர் இடம்பெற்று உள்ளனர். இஸ்ரேலில் நப்தலி பென்னட் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளதால், பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...