Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

65 வயதில் பில் கேட்ஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு !

உலக அளவில் பிரபலமான அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ். அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் பில் க...

உலக அளவில் பிரபலமான அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ். அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் பில் கேட்ஸ் மனைவி மெலிண்டா கேட்ஸ். கடந்த 1975ஆம் ஆண்டு பால் ஆலன் உடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கிய காலத்தில் அதன் தலைமை செயல் அதிகாரியாக பில் கேட்ஸ் செயல்பட்டார்.
அதன்பின்னர், அதன் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளார். அதன்பின்னர் அந்த நிறுவனம் பல்வேறு மென்பொருள் படைப்புகளை உருவாக்கி இந்த உலகிற்கு வழங்கியது. இன்றளவும் அதன் பயன்பாடு தொடர்கிறது. அந்நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டா கேட்சை, பில் கேட்ஸ் திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் 6 ஆண்டுகள் கழித்து, கடந்த 2000ம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. லாபநோக்கு இல்லாத இதன் வழியே கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உலகம் முழுவதும் இந்த அறக்கட்டளை மூலம் உதவிகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த தம்பதி 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். இதுதொடர்பாக பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்துத் தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து வரப்பட்டுள்ளன.
இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம். எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை, என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நீதிமன்றத்தை நாடி இருவரும் முறைப்படி விவாகரத்து செய்வர் என கூறப்படுகிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...