சுவீடன் நாட்டின் சுற்றுக்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், போராடும் விவசாய...
சுவீடன் நாட்டின் சுற்றுக்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், போராடும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன் என தெரிவித்து இருக்கிறார்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை எதிர்த்து, விவாசயிகள் தலைநகர் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போராடும் விவகாயிகள், டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க, டெல்லி காவல்துறையினர் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அத்துடன், அங்கே இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், சுவீடனின் சுற்றுக்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் விவசாயிகளுக்கு ஆதரவான ட்வீட்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இதனால், அவர் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சதி மற்றும் குழுவினருக்கு இடையே பகைமையை வளர்ப்பதற்கான முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கு தொடர்ந்தாலும் அமைதியான முறையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தொடரும் என கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
No comments