இஸ்ரேலில், யூதர்களின் விழா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 45 பேர் உயிரிழந்தனர்; 150 பேர் காயம் அடைந்தனர். மேற்காசிய நா...
இஸ்ரேலில், யூதர்களின் விழா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 45 பேர் உயிரிழந்தனர்; 150 பேர் காயம் அடைந்தனர்.

மேற்காசிய நாடான இஸ்ரேலில், யூதர்களின் புனித விழாவான, 'லாக் பாமர்' விழா, ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது, சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கும்.
இந்த ஆண்டிற்கான விழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, யூதர்களின் புனித இடமான மேரோன் மலைப் பகுதியில், நேற்று முன்தினம் இரவு நடந்த பிரார்த்தனையில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அதிக அளவில் கூடியதால், ஒரு கட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதில் உயிர் பிழைக்க, ஒருவர் மீது ஒருவர் ஏறிச் சென்றதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, 45 பேர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயம்அடைந்தோரை மீட்டு, மருத்துவ மனைகளில் அனுமதித்தனர். இதில், சிலரது உடல்நிலை மோசமாக உள்ளது.
இது குறித்து பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறுகையில், "இது ஒரு மோசமான பேரழிவு," என்றார். மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், அவர் உத்தரவு பிறப்பித்தார். உயிரிழந்தோருக்கு, அதிபர் ரியுவென் ரிவ்லின் இரங்கல் தெரிவித்தார்.
No comments