Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்த எலான் மஸ்க் (Elon Musk)

அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவை முந்திய, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க், உலகின் முதல் பணக்காரர் ஆனார். மின்னல் வேக, ...

அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவை முந்திய, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க், உலகின் முதல் பணக்காரர் ஆனார்.
மின்னல் வேக, 'ஹைப்பர் லுாப்' பயணம், செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என, கனவு திட்டங்களின் கதாநாயகனாக திகழ்கிறார், எலான் மஸ்க். 
கடந்த சில வாரங்களாக, உலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலிருந்த அவரது சொத்து மதிப்பு, நியூயார்க்கில் நேற்று காலை 10.15 மணிக்கு 188.5 பில்லியன் டாலராக இருந்தது.இது அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவை விட, 1.5 பில்லியன் டாலர் அதிகமாக சேர்த்துள்ளார். 
கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல், உலக பணக்காரர் பட்டியலில், தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தவர் பிசோசா. 
டெஸ்லாவின் பங்கு அதிகவேக வளர்ச்சியில் செல்வதால், எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பும் உயர்ந்து கொண்டு செல்கிறது. கடந்த ஆண்டு மட்டும் டெஸ்லாவின் பங்குகள் 743% உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்