குமரி மாவட்டத்தில் 5 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன. 8) கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்...
குமரி மாவட்டத்தில் 5 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன. 8) கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரி மாவட்டத்தில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு தலைமையிட மருத்துவமனை, செண்பகராமன் புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டவிளை அரசு நகா்ப்புற சுகாதார நிலையம் மற்றும் ஜெயசேகரன் மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி திட்டத்திற்கான ஒத்திகை நடைபெற உள்ளது.
இதற்காக காற்றோட்டமான இட வசதி, இணைய இணைப்பு, மின்சாரம் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளது.
பயனாளிகள் தடுப்பூசியை எங்கே, எந்த இடத்தில் பெறவேண்டும் என்ற விவரங்கள் அவா்களது மொபைல் எண்ணுக்கு இா்-ரஐச செயலியின் மூலமாக குறுந்தகவல் சென்றடையும். மேலும் தடுப்பூசி பெற்ற விவரங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். தொடா்ந்து 4 கட்டங்களாக தடுப்பூசி பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கும், 2-ஆம் கட்டமாக கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் முன் களப் பணியாளா்களுக்கும், 3-ஆம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கும், 4-ஆம் கட்டமாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments