காதலித்த ஒரு பெண்ணை திருமணம் செய்வதே இக்காலத்தில் பெரிய விஷயமாக பார்க்கப்படும் சூழலில் ஒரு இளைஞர், தன்னை காதலித்த இரண்டு பெண்களையுமே ஒரே நேர...
காதலித்த ஒரு பெண்ணை திருமணம் செய்வதே இக்காலத்தில் பெரிய விஷயமாக பார்க்கப்படும் சூழலில் ஒரு இளைஞர், தன்னை காதலித்த இரண்டு பெண்களையுமே ஒரே நேரத்தில் திருமணம் செய்வது, அதுவும் சடங்கு, சம்பிரதாயங்களுடன் ஊரார் முன்னிலையில் திருமணம் செய்வது என்பதை அதிர்ஷ்டம், யோகம், அபூர்வம், ஆச்சரியம் என அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
அது போன்றதொரு அரிய நிகழ்வு குறித்தான வீடியோவும், திருமண பத்திரிக்கையும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞரை சமூக வலைத்தளத்தில் வாழ்த்தியும், வயிற்றெறிச்சலில் கடிந்தும் வருகின்றனர் சமூக வலைத்தள வாசிகள்.


சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த் பஸ்தார் மாவட்டத்தை சேர்ந்தவர் 24 வயதாகும் சந்து மவுர்யா. பகுதி நேர விவசாயியாகவும், பகுதி நேர கூலித் தொழிலாளியாகவும் பணியாற்றி வரும் இவர், தோகபால் எனும் பகுதிக்கு மின்சார கம்பங்கள் நடும் பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணான சுந்தரி என்பவருடன் காதல் வயப்பட்டார்.
இருவரும் காதல் திருமணம் செய்ய திட்டமிருந்த நிலையில் ஒராண்டிற்கு பிறகு மவுர்யாவின் வாழ்க்கையில் நுழைந்தார் ஹசீனா பகேல். மவுர்யாவின் கிராமமான திக்ரலோஹங்காவிற்கு ஒரு திருமண நிகழ்வில்கலந்து கொள்ள வந்த ஹசீனாவுக்கு மவுர்யா மீது காதல் ஏற்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹசீனா தனது காதலை மவுர்யாவிடம் வெளிப்படுத்திய போது அவர் சுந்தரியுடனான காதலை ஹசீனாவிடம் தெரிவித்ததாகவும், அதனை தெரிந்தபோதும் கூட ஹசீனாவுக்கு மவுர்யாவை திருமணம் செய்யும் ஆவலை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சுந்தரி, ஹசீனா இருவரும் சந்தித்து பேசி இருவருமே மவுர்யாவுடன் சேர்ந்து ஒன்றாக வாழ ஒத்துழைத்ததன் பேரில், மூவரும் மவுர்யாவின் வீட்டில் திருமணத்துக்கு முன்னதாக இணைந்து ஒன்றாக வாழ தொடங்கியுள்ளனர். அதே வீட்டின் மவுர்யாவின் பெற்றோரும், இரண்டு சகோதரர்களும் இவர்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே மூவரும் கிராமத்தினர் முன்னிலையில் சடங்கு, சம்பிரதாயங்களுடன் திருமணம் செய்துள்ளனர். இவர்களின் திருமணத்தில் 500க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கலந்து கொண்டதாக தெரிகிறது. இத்திருமணத்தில் ஹசீனாவின் குடும்பத்தினர் கலந்து கொண்டதாகவும், சுந்தரியின் குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை என மவுர்யா கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் மவுர்யா குறிப்பிட்டுள்ளார்.
மவுர்யா - சுந்தரி - ஹசீனா ஆகியோரின் திருமணம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
चंदू की हुईं सुंदरी और हसीना
— Gyanendra Tiwari (ABP News) (@gyanendrat1) January 7, 2021
छत्तीसगढ़ के जगदलपुर में चंदू मौर्य से दो लड़कियों को प्यार हुआ। चंदू ने दोनों से एक ही मंडप में शादी की। गाँव वालों को पार्टी दिया और सभी का आशीर्वाद लिया। शादी में क़रीब 600 लोग शामिल हुए। अब तीनों एक ही परिवार में रहते हैं। जीवन खुशहाल है। pic.twitter.com/4OiVNx85ES
No comments