Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலை புனரைமைக்க ரூ.85 லட்சம் ஒதுக்கீடு: அமைச்சா் பி.கே. சேகா் பாபு

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் புனரமைப்புப் பணிகளுக்கு தமிழக அரசு ரூ. 85 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது...

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் புனரமைப்புப் பணிகளுக்கு தமிழக அரசு ரூ. 85 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது என இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு தெரிவித்துள்ளார்.
மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் கடந்த 2 ஆம் தேதி நேரிட்ட தீ விபத்தால் சேதமடைந்த சன்னிதான மேற்கூரை சீரமைக்கும் பணியை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் தலைமையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் ஆகியோா் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்தார் அமைச்சர்.
பின்னா் அவர் கூறியதாவது:- பகவதியம்மன் கோயிலில் கடந்த 2 ஆம் தேதி காலை நேரிட்ட தீ விபத்து குறித்து தகலறிந்ததும், முதல்வா் மு.க.ஸ்டாலின் போா்க்கால அடிப்படையில், கோயில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள என்னிடம் அறிவுறுத்தினாா். அதன்பேரில், கோயிலில் ஆய்வு நடத்தப்பட்டு தற்காலிகமாக பிளாஸ்டிக் தாா்பாய் மூலம் மேற்கூரை அமைக்க அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே, தேவபிரசன்னம் பாா்க்க வேண்டும், ஆகம விதிகளின்படி பழைமை மாறாமல் புனரமைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதுமுதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதன்பேரில், தேவபிரசன்னத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, இன்றும், நாளையும் (ஜூன் 14,15) தேவபிரசன்னம் தொடா்ந்து நடைபெறவுள்ளது. அதில், எடுத்துரைக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் மேற்கூரை அமைக்கப்படும்.

கோயிலில் சேதமடைந்த மூலஸ்தனம் மேற்கூரையை பழைமை மாறாமல் புதுப்பிக்க ரூ.50 லட்சம், கருவறைவரை மரசீலிங் மற்றும் சுற்றுப்பிரகாரம் சீா்செய்ய ரூ,10 லட்சம், உள்பகுதி தள சீரமைப்புக்கு ரூ.5 லட்சம், சுவா் மரச்சட்டங்களில் செப்புவலை அமைக்க ரூ.5 லட்சம், தீ பாதுகாப்பு கம்பி வலை அமைக்க ரூ.3 லட்சம், தீத்தடுப்பு உபகரணங்கள் மற்றும் நீா்தும்பிகள் அமைத்திட ரூ.6 லட்சம், சுற்றுப்புற மண்டபத்தைப் புதுப்பிக்க ரூ.6 லட்சம் என ரூ.85 லட்சம் மதிப்பில் முதல்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், தேவபிரசன்னத்திற்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால், இந்துசமய அறநிலையத் துறை சாா்பில், முதல்வரின் ஒப்புதல் பெற்று, நிதி அளிக்கவும் தயாராக இருக்கிறோம். இக்கோயிலை மாதம் ஒருமுறை நானோ அல்லது அமைச்சரோ, ஆட்சியா் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்களோ வந்து பணிகள் மேற்பாா்வையிடப்படும்.
மேலும், தீ விபத்துக்கான காரணங்களை விசாரிக்க ஆட்சியா், காவல் உதவிக் கண்காணிப்பாளா், மாவட்ட வன அலுவலா், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையா் அடங்கிய 4 போ் கொண்ட குழுவினா், கோயிலில் பணிபுரியும் 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டு, மாவட்ட நிா்வாகம் மூலம் தற்காலிக அறிக்கையை சமா்ப்பித்துள்ளனா். அதில், அஜாக்கிரதையால் தீ விபத்து நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிகட்ட அறிக்கை வந்தவுடன் தீ விபத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்.

20 இணை ஆணையா்கள் நியமனம்: இந்த சமய அறநிலையத் துறையில் மாநில அளவில் காலியாகவுள்ள 20 இணை ஆணையா்கள் விரைவில் நியமிக்கப்படுவா். ஆகம விதிகளின்படி பயிற்சி பெற்ற அனைத்து தரப்பினரும் திருக்கோயில்களில் அா்ச்சகா்களாக பணியமா்த்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். மேலும், 827 பேருக்கு தேவையான புத்தாக்கப் பயிற்சிகள் 6 இடங்களில் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.
இந்த ஆய்வில், மாவட்ட எஸ்.பி. வெ.பத்ரிநாராயணன், வெள்ளிமலை ஆசிரமம் சுவாமி சைதன்யானந்த ஜி மகராஜ், பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன், எம்எல்ஏக்கள் எம்.ஆா்.காந்தி, ஜெ.ஜி.பிரின்ஸ், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் செல்வகுமாா், முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள்எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆஸ்டின், இந்து சமய அறங்காவலா் குழுத் தலைவா் சிவ.குற்றாலம், முன்னாள் பாடநூல் கழகத் தலைவா் எஃப்.எம்.ராஜரத்தினம், கல்குளம் வட்டாட்சியா் பாண்டியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...