Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட சனம்: போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ் வீட்டிலிருந்து சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டதற்கு போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் மீம் போட்டு ...

பிக் பாஸ் வீட்டிலிருந்து சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டதற்கு போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் மீம் போட்டு வருகின்றனர்.
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த மாதம் 4 ஆம் தேதி தொடங்கியது. இதில் நடிகைகள் ரேகா, ரம்யா பாண்டியன், ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, ஆரி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ஆஜித், சம்யுக்தா, ஷிவானி நாராயணன், கேப்ரியலா, அர்ச்சனா உள்ளிட்ட பல போட்டியாளர்கள் பங்கேற்றனர். கடந்த 3 சீசன்களைப் போலவே, இந்த சீசனுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 
ஒவ்வொரு வாரமும் மக்கள் அளித்து வரும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதனைதொடர்ந்து நேற்று சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார். 
ரசிகர்களின் ஆதரவு இருந்தும் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், விமர்சனத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. சனம் ஷெட்டிக்கு ஆதரவாக நெட்டிசன்கள் மீம் போடத் தொடங்கிவிட்டனர். 
பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் சனம் ஷெட்டி வெளியேறியது அதிர்ச்சியளித்தது. வெளியேறிய பின் கமல்ஹாசன் முன்னிலையில் சனம் இதர போட்டியாளர்களுடன் கலந்துரையாடிய போது பேசிய ஆரி, "நீ ஒரு ட்ரூ வாரியர் சனம். இந்த எவிக்‌ஷன் உனக்கு நடந்திருக்கக் கூடாது" என கமல் முன்பாகவே வெளிப்படையாக சொல்லிவிட்டார். இதற்கு பதிலளித்த சனம், மக்களின் தீர்ப்பை மதிப்போம் என சொல்லிவிட்டு வெளியேறினார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்