மணவாளக்குறிச்சியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மனம் மகிழ் மன்ற மது கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ந...
மணவாளக்குறிச்சியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மனம் மகிழ் மன்ற மது கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பேரூர் காங்., தலைவர் லிபின் பாபு தலைமை வகித்தார். குருந்தன்கோடு மேற்கு வட்டார காங்., தலைவர் கிளாட்சன், குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குட்டிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அகில இந்திய இளைஞர் காங்., ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், குளச்சல் தொகுதி இளைஞர் காங்., முன்னாள் தலைவர் சுமன், மாவட்ட மகளிர் அணி தலைவி அருள் சபீதா ரக்சலின், இளைஞர் காங்., மாவட்ட தலைவர் நரேந்திர தேவ், துணைத்தலைவர் கிறைஸ்ட் ஜெனீத், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராஜரத்னம், தக்கலை ஒன்றிய தி.முகசெயலாளர் ரமேஷ்பாபு, குளச்சல் நகர திமுக. பொறுப்பாளர் ரகீம்,
இளைஞர் அணி அமைப்பாளர் அனி, பேரூர் திமுக.செயலாளர் நிஜாம், மாவட்ட எஸ்.டி.பி.ஐ. பொதுச்செயலாளர் சாதிக் அலி, குளச்சல் தொகுதி தலைவர் அப்துல் ஜப்பார், மாவட்ட தமுமுக. செயலாளர் அன்வர் சதாத், பேரூர் த.முமுக. செயலாளர் பகர்தீன், ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் ரவி மற்றும் மணவை செல்வன், சுபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments