Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

நாகர்கோவிலில் பட்டபகலில் யாசகர் அடித்துக்கொலை: பொதுமக்கள் ஓட்டம்

நாகர்கோவில் அருகே பிச்சை எடுத்த பணம் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவ...

நாகர்கோவில் அருகே பிச்சை எடுத்த பணம் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே எராளமான பிச்சை காரர்கள் தங்கி வருகின்றனர். இவர்கள் பல்வேறு இடங்கள் சென்று பிச்சை எடுத்து வந்தபோதிலும் இரவு நேரத்தில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே வந்து தங்குவது வழக்கம். 
இந்த கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வடமாநிலத்தவர்களும் அடங்குவர். நேற்று மதியம் இரண்டு பிச்சைகாரர்களிடையே பிச்சை எடுத்த பணம் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவரும் மற்றொருவர் ஊத்திரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவருமாவார். 
இவர்கள் வாய்தகராறில் ஒருவருக்கொருவர் பேசுவது இருவருக்கும் புரியாத நிலையில் உத்திரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் தமிழகத்தைச் சேர்ந்தவரை கையாலும் கம்பாலும் அடித்தே கொன்றுவிட்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தார் வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடம் வந்து இறந்தவரின் உடலை ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் கொலை செய்ததாக கருதப்படும் உத்திரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரை வடசேரி போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்து வருகின்றனர். அவர் பதில் எதுவும் பேசாமல் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பற்களை நறுநறுவென கடித்தவண்ணம் உள்ளார். இதனால் அவரைப்பற்றிய விபரங்கள் சேகரிப்பதில் போலீசார் சிரமப்பட்டு வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்