Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

ரம்யா பாண்டியன் முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, ...

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் முதல் சீசனை நடிகர் ஆரவ்வும் 2-வது சீசனை நடிகை ரித்விகாவும் கடந்த வருடப் போட்டியை முகென் ராவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். 
இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்குகிறது. அக்டோபர் 4 முதல் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை இந்த முறையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

ஒவ்வொரு வருடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும்போது அதில் பங்கேற்பவர்கள் குறித்த எதிர்பார்ப்பு உருவாகும். இந்தமுறை பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 
நடிகை ரம்யா பாண்டியன், நடிகை ஷிவானி நாராயணன், விஜே அர்ச்சனா, நடிகர் ஜித்தன் ரமேஷ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ரேகா, நடிகை கேப்ரியலா சார்ல்டன், நடிகை சனம் ஷெட்டி, நடிகர் ரியோ ராஜ், சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டம் வென்ற ஆஜித், வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் பாலாஜி முருகதாஸ், நடிகை அறந்தாங்கி நிஷா, மாடல் சோம்சேகர், நடிகர் அனு மோகன் ஆகியோர் இந்த வருட பிக் பாஸில் பங்கேற்பதாகவும் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
100 நாள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...