மணவாளக்குறிச்சி பகுதியில் மிகவும் புகழ்பெற்ற “விஷ முறிவு வைத்தியர்” கிருஷ்ணன் நாயர் (வயது 86) அவர்கள் இன்று (04-09-2020 – வெள்ளிக்கிழமை) ம...
மணவாளக்குறிச்சி பகுதியில் மிகவும் புகழ்பெற்ற “விஷ முறிவு வைத்தியர்” கிருஷ்ணன் நாயர் (வயது 86) அவர்கள் இன்று (04-09-2020 – வெள்ளிக்கிழமை) மாலை 3 மணி அளவில் காலமானார்.

மணவாளக்குறிச்சி, ஆற்றின்கரை பகுதியில் விஷ வைத்தியசாலையை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்தார். மணவாளக்குறிச்சி மட்டுமல்லாது வெளியூரிலிருந்தும் கொடிய விஷதன்மை கொண்ட ஜீவராசிகளால் கடிபட்டவர்களை, தன்னுடைய விஷமுறிவு மருந்துக்களால் காப்பாற்றும் கைராசியான வைத்தியர்.
அனைவராலும் விஷ வைத்தியர் என்ற அடைமொழியோடு அறியப்படுபவர். வயது முதிர்வு காரணமாக இறந்ததாக தெரிகிறது.

அன்னாரது உடல் அஞ்சலிக்காக மணவாளக்குறிச்சி, ஆற்றின்கரையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் கிருஷ்ணன் நாயர் அவர்களுக்கு பிசியோதெரபி டாக்டர். ராஜா கிரீஷ் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
No comments