மதுரை தென்பலஞ்சி பகுதியில் நடைபெறும் பொங்கல் விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்பியுமான ராகுல்காந்தி பங...
மதுரை தென்பலஞ்சி பகுதியில் நடைபெறும் பொங்கல் விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்பியுமான ராகுல்காந்தி பங்கேற்றார்.

மதுரையில் உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட ராகுல் காந்தி, பின்னர் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். பொங்கல் விழாவில் ராகுல்காந்தி மக்களோடு அமர்ந்து உணவருந்தினார்.
முன்னதாக, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நேரில் பார்வையிட்ட ராகுல் காந்தி அங்கிருந்து புறப்படும் முன்னர், அங்கிருந்தவர்களிடம் உரையாற்றினார்.

அப்போது, தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு மிகவும் பாராட்டுக்குரியது என்றும் உலகப்புகழ் பெற்றது என்றும் தெரிவித்தார். மேலும், ஜல்லிக்கட்டை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தனக்கு உள்ளதாக குறிப்பிட்ட்டார்.
No comments