Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

சவுதி அரேபியாவில் ஒரு லட்சம் ஆண்டுகள் பழமையான மனித கால்தடங்கள் கண்டுபிடிப்பு!

மத்தியக் கிழக்கு நாடான சவுதி அரேபியாவில் சுமார் 120,000 ஆண்டுகள் பழமையான மனித கால்தடங்கள் கண்டுபிடிக்கப்படுள்ளன. பண்டையகால மனித நாகரிகம் தொட...

மத்தியக் கிழக்கு நாடான சவுதி அரேபியாவில் சுமார் 120,000 ஆண்டுகள் பழமையான மனித கால்தடங்கள் கண்டுபிடிக்கப்படுள்ளன.
பண்டையகால மனித நாகரிகம் தொடர்பாக உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

ஆய்வாளர்கள் மனிதன் வாழ்ந்த இடங்கள், வாழும் முறைகள், பயன்படுத்திய பொருட்கள் மூலமாக வாழ்ந்த காலத்தை ஆய்வு செய்கின்றனர். அந்தவகையில், சவுதி அரேபியாவின் வடக்கு பகுதியில் உள்ள பழமையான ஏரி ஒன்றில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 120,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மனித காலடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
இங்கு ஏரி காணப்பட்டதால், அதிக அளவிலான மனிதர்கள் மற்றும் விலங்குகள் வந்திருக்க வாய்ப்புள்ளதாக ஆராயச்சியாளர்கள் கூறுகின்றனர்.மேலும், ஒட்டகம், எருமை, யானை உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதற்காகவும் மனிதர்கள் இங்கே வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 7 தடங்கள் மனிதனுடையது என கண்டறியப்பட்டுள்ளது. 
சில கால்தடங்கள் அளவில் வேறுபாடுடனும், அதிக இடைவெளியுடனும் காணப்படுகின்றன. மனிதனின் காலடி தடம் மட்டுமல்லாமல் மேலும் 233 தடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. 

அதேநேரத்தில் வேட்டையாட பயன்படுத்தியதற்கான ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆப்ரிக்காவில் இருந்து யுரேசியாவுக்கு சென்ற மக்கள், நீர் ஆதாரத்தை தேடி, சவுதி அரேபியாவுக்கு வந்திருக்கலாம் என ஆராயச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...