அபுதாபி 'பிக் டிக்கெட் ரேபில் டிரா'வில், யுஏஇ.,யில் வசிக்கும் இந்தியருக்கு 10 மில்லியன் திர்ஹம்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.19.90 கோடி)...
அபுதாபி 'பிக் டிக்கெட் ரேபில் டிரா'வில், யுஏஇ.,யில் வசிக்கும் இந்தியருக்கு 10 மில்லியன் திர்ஹம்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.19.90 கோடி) மெகா பரிசு தொகை கிடைத்துள்ளது.

'பிக் டிக்கெட் ரேபில் டிரா' முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை(செப்.,3) அறிவிக்கப்பட்டது.
இதில் இந்தியாவை சேர்ந்த துபாய் குடியிருப்பாளரான குர்பிரீத் சிங்(35) வாங்கிய, 067757 என்ற எண்ணுக்கு, குலுக்கல் முறையில் ஜாக்பாட் பரிசு கிடைத்தது.
ஐடி மேனேஜராக பணியாற்றி வரும் இவர், தனது மனைவி, இரு குழந்தைகளுடன் ஷார்ஜாவில் வசித்து வருகிறார்.ஜாக்பாட் குறித்து அவர் அளித்த பேட்டி: நான் 5 வயது குழந்தையாக இருக்கும் போதே யுஏஇ வந்து விட்டேன்.
எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த அமீரகம், தற்போது நம்ப முடியாத மெகா பரிசு பணத்தையும் கொடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நான் இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வருகிறேன். எனக்கு கிடைத்துள்ள பணத்தை வைத்து, இங்கு சொந்த வீடு வாங்க திட்டமிட்டுள்ளேன்.
பஞ்சாபில் வாழும் எனது பெற்றோரை இங்கு அழைத்து வரப்போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
No comments