குவைத் நாட்டிற்கான புதிய பிரதமராக ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபாவை அரசர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா செவ்வாய்க்கிழமை அறிவித்தார...
குவைத் நாட்டிற்கான புதிய பிரதமராக ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபாவை அரசர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

குவைத் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் ஷேக் சபா கலீத் அல்-ஹமாத் அல்-சபா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து குவைத்தின் அரசர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா பிரதமர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்நிலையில் குவைத்தின் புதிய பிரதமராக ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபாவை நியமித்து அரசர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் அரசர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவை சந்தித்து கலீத் அல் ஹமத் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக கலீத் அல் ஹமத் வெளியுறவுத் துறை அமைச்சராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
No comments