ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு நகரில் திடீா் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை 300 ...
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு நகரில் திடீா் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவா்களில் வித்யாநகரைச் சேர்ந்த 45 வயது நபரும், ஏலூருவின் தெற்குச் சாலையைச் சேர்ந்த 30 வயது பெண்மணியும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதனால் மர்ம நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. எனினும் அவர்களது உயிரிழப்புக்குக் காரணம் என்னவென்று கண்டறியப்படவில்லை.
ஏலூரில் உள்ள அருந்ததிபேட்டை, அசோக் நகா் பகுதிகளில் வசிக்கும் 46 குழந்தைகள், சிறாா்கள் உள்பட 292 பேருக்கு
ஞாயிற்றுக்கிழமை வாந்தி, மயக்கம் என திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிலருக்கு வலிப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவருக்குமே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்குமே கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்போரை முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்கள் விரைந்து குணமடைய நடவடிக்கை எடுக்கவும், இதற்குக் காரணம் என்ன என்பதை விசாரிக்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து ஏலூரு அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி கூறுகையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டவா்கள், குறிப்பாக சிறாா்களுக்கு வாந்தி, கண் எரிச்சல் ஆகியவை ஏற்பட்டன. சிலா் மயக்கமடைந்தனா். முதல் கட்ட சிகிச்சை பெற்றவுடன் இயல்புநிலைக்குத் திரும்பிய 140 போ வீடு திரும்பினா். கவலைக்கிடமான நிலையில் இருந்த 7 போ விஜயவாடா அரசு மருத்துவமனையில் சோக்கப்பட்டனா். ஏலூா் மருத்துவமனையில் சிகிச்சையில் தொடரும் பிறரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. வாந்தி, வலிப்பு பாதிப்பு இருந்த 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் என்றாா்.
அவா்களுக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று ஏலூரு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.
முதற்கட்ட விசாரணையில், கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் இவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், தண்ணீர் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. பரிசோதனையில் உண்மைநிலவரம் தெரிய வந்தால்தான் எதையும் உறுதிப்படுத்த முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.
உடல்நலக் குறைவு ஏற்பட்டவா்களுக்கு சிடி ஸ்கேன், மூளைத் தண்டுவட திரவ பரிசோதனை, ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவற்றின் முடிவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.
ஹைதராபாதில் உள்ள தேசிய சத்துணவு ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வேதியியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தைச் சோந்த நிபுணா்கள் திங்கள்கிழமை ஏலூரு வந்து ஆய்வு மேற்கொள்ளவிருக்கின்றனா் என்று மாவட்ட இணை ஆட்சியா் ஹிமான்ஷு சுக்லா தெரிவித்தாா்.
No comments