இந்திய சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா நேற்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அ...
இந்திய சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா நேற்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அம்பேத்கரின் சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மணவாளக்குறிச்சி பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று அம்பேத்கருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதன்படி, மணவாளக்குறிச்சி, வெள்ளிமலை மற்றும் மண்டைக்காடு ஆகிய பகுதிகளில் டாக்டர் அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட எஸ்.சி அணி தலைவர் கதிரேஷன், மாவட்ட விவசாய அணித் தலைவர் சிவகுமார். குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய பொதுசெயலாளர் எம்.ஐயப்பன் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்ட எஸ்சி அணி செயற்குழு உறுப்பினர் கௌதமன், மணவை பேரூர் தலைவர் சுரேந்திரன், வெள்ளிமலை பேரூர் தலைவர் ஆர்.எஸ்.குமார் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் எஸ்.சதீஸ்குமார், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தலைவர் சி.பி.ராஜ் ஒன்றிய செயலாளர் உதயகுமார், ஒன்றிய எஸ்.சி. அணித் தலைவர் ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments