Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:
latest

Ads Place

ரஜினி கட்சி பின்னணியில் பா.ஜனதாவா? மாநில தலைவர் முருகன் பதில்

குமரி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருக...

குமரி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் குமரி மாவட்டம் வந்தார். அவருக்கு சுசீந்திரம் கரியமாணிக்கபுரத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நாகர்கோவில் வந்த அவர் வடசேரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து அவர் கூறியதாவது:-
அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்துவதில் பா.ஜனதா கட்சி பெருமிதம் கொள்கிறது. அம்பேத்கர் பிறந்த, வாழ்ந்த மற்றும் லண்டனில் படித்த இடங்கள் அனைத்தும் மறந்து இருந்தது. அந்த இடங்களை கண்டறிந்து நினைவிடங்களாக மாற்றிய பெருமை பிரதமர் நரேந்திரமோடியையே சேரும். அதுமட்டும் அல்ல டெல்லியில் 200 கோடி ரூபாய் செலவில் அம்பேத்கர் பெயரில் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. அவரது பெயரில் நாணயம் வெளியிடப்பட்டதோடு செல்போன் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் இருந்த போது தான். 
வேல் யாத்திரை நவம்பர் 6-ந் தேதி தொடங்கியது. நாளை (அதாவது இன்று) நிறைவு பெற உள்ளது. வேல் யாத்திரைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும், ஆதரவும் கிடைத்துள்ளது. 

குறிப்பாக முருக பக்தர்களிடம் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் மக்களின் பேராதரவு இருந்தது. ஆனால் புயல் காரணமாக பல மாவட்டங்களில் யாத்திரையை நிறுத்தி விட்டோம். எனினும் யாத்திரை நாளை திட்டமிட்டபடி முடியும். எத்தனை தடங்கல் வந்தாலும், அத்தனை தடங்கல்களையும் மீறி எங்களுடைய வேல் யாத்திரை நடைபெறும். 

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக சொல்லியிருக்கிறார். அவர் தேசிய பற்றாளர். ஆன்மிக வாதி. அவர் கட்சி தொடங்கட்டும். அதன்பிறகு எங்களது தேசிய தலைமையின் அறிவுரைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு பின்னணியில் பா.ஜனதா இருக்கிறதா? என கேட்கிறீர்கள். பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார். 
இதைத் தொடர்ந்து நாகராஜா கோவில் ரத வீதியில் உள்ள ஒரு மண்டபத்தில் பா.ஜனதா நிர்வாகிகளுடன் எல்.முருகன் ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவுரை வழங்கியதாக தெரிகிறது. மேலும் இன்று (திங்கட்கிழமை) முடிவடைய உள்ள வேல் யாத்திரை தொடர்பாகவும் பேசியுள்ளார். 
கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பார்வையாளருமான சி.டி.ரவி, இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள் முத்துராமன், தேவ், ராஜன், அஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்