எஸ்.பி.பி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பால் எஸ்.பி.பி காலமானார் என்ற செய்தி உலகம் முழுவதும் உள்...
எஸ்.பி.பி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கொரோனா பாதிப்பால் எஸ்.பி.பி காலமானார் என்ற செய்தி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் வலியைக் கொடுத்துள்ளது.
அவர் சுமார் 11 மொழிகளில் 42 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்லத்தில், அவரது குடும்பத்தினர் சார்பில் அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
இந்நிலையில் எஸ்.பி.பி.,யின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அடக்கம் செய்யும் இடத்திற்கு நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். நேரில் கலந்துகொள்ள முடியாத பிரபலங்கள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரியமானவளே படத்தில் விஜய்யின் தந்தையாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments