நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டில் பைரி படப்பிடிப்பு நடந்தது. கல்லூரி மாணவி வேடத்தில் நடிகை மேக்னா நடித்தார். டி.கே. புரெடெக்சன் தயாரிப்பில் ...
நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டில் பைரி படப்பிடிப்பு நடந்தது. கல்லூரி மாணவி வேடத்தில் நடிகை மேக்னா நடித்தார்.
டி.கே. புரெடெக்சன் தயாரிப்பில் மதுரையை சேர்ந்த துரைராஜ் தயாரிக்கும் படம் பைரி. கன்னியாகுமரி மாவட்டத்தின் பாரம்பரியம் மிக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து நாகர்கோவில் மக்களின் வாழ்வியல் முறையை பிரதிபலிக்கும் படமாக உருவாக்கப்பட்டு உள்ளது.

புறா பந்தயத்தை பற்றி முழுமையாக விளக்கும் வகையில் அமைந்திருக்கும். அறுகுவிளையில் 100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது புறா பந்தயம். இந்த படத்தை அறுகுவிளையை சேர்ந்த ஜாண் கிளாடி இயக்குகிறார்.
கொரோனாவுக்கு முன் கடந்த ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கி மார்ச் மாதம் 23-ம் தேதி வரை நடந்த படப்பிடிப்பு அதன் பிறகு தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. டிசம்பர் இறுதியில் முழு படப்படிப்பையும் முடிக்கும் வகையில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கதாநாயகனாக சையத் மஜீத் கதாநாயகியாக மேக்னா நடிக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் ஆறுமுகம் முக்கிய கதாப்பாத்திரத்திலும், வினு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு வசந்த குமார், எடிட் சதீஷ் குமார், நடன இயக்குனராக சிவகிரீஷ் ஆகியோர் செயல்படுகின்றனர்.

கதாநாயகன் சையத் மஜீத் மற்றும் இயக்குநர் ஜாண் கிளாடி
படப்பிடிப்புகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா, வெட்டூர்ணிமடம், அறுகுவிளை, கன்னியாகுமரி கடற்கரை, தனியார் ஆஸ்பத்திரிகள், நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டு, கல்லூரியிலும் நடப்பதாக நிர்வாகம் தயாரிப்பாளர் கவித்திறன் தெரிவித்தார்.
நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டில் கதாநாயகி மேக்னா கல்லூரி மாணவியாக மினி பஸ்சில் இருந்து இறங்கி சக மாணவிகளோடு வரும் போது கதாநாயகன் சையத் மஜீத் பாட்டு பாடுவது போன்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதன் பிறகு பஸ் ஸ்டாண்டில் உள்ள படிகள் வழியாக ஏறி செல்லும் காட்சிகளும் படமாக்கப்பட்டது. இதை பஸ் ஸ்டாண்டில் உள்ள பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
No comments