குமரி மாவட்டம் காப்புக்காடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்கள் நிலை தடுமாறி லாரியில் மோதி விபத்து. ஒருவர் பலி, ஒருவர் படுகாயம் அடைந்...
குமரி மாவட்டம் காப்புக்காடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்கள் நிலை தடுமாறி லாரியில் மோதி விபத்து. ஒருவர் பலி, ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் நவாஸ்கான் இவரது மகன் செய்யது ஹுசேன் (16). இவர் உறவினர் மகனான ஷேக் முகமது என்பவருடன் மார்த்தாண்டம் பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது காப்புக்காடு பகுதியில் வைத்து இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் எதிரில் வந்த லாரியில் தலை நசுங்கி செய்யது ஹுசேன் சம்பவ இடத்திலே பலியானார். இதில் படுகாயம் அடைந்த ஷேக் முகம்மது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து செய்யது ஹுசேன் உடலை கைப்பற்றி உடல் கூர் ஆய்வுக்கு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து சம்பவம் குறித்து புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments