கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி உதவி வழங்கினார் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்...
கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி உதவி வழங்கினார்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளும் தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டு உள்ளன. இதற்காக நிவாரண நிதியும் திரட்டப்படுகின்றன.
இதுபோல் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ சினிமா சங்கங்களும் நிதி திரட்டி வருகின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழி நடிகர்-நடிகைகளும் அரசுக்கும் சினிமா தொழிலாளர்களுக்கும் நிதி வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது ரூ.1.30 கோடி நிவாரண நிதி வழங்கி உள்ளார். இந்த தொகையில் ரூ.50 லட்சம் தமிழக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கும், ரூ.25 லட்சம் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சிக்கும், ரூ.25 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கும் வழங்கி இருக்கிறார்.
இதுபோல் கேரள முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சமும், கர்நாடக முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சமும் ஆந்திர முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சமும், தெலுங்கானா முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சமும், புதுச்சேரி மாநில முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சமும் வழங்கி உள்ளார்.
இது தவிர தமிழகம் முழுவதும் தனது ரசிகர்கள் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேரில் உதவிகள் வழங்க பல லட்சங்கள் நிதி அளித்து இருக்கிறார். இந்த தொகை ரசிகர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
No comments