குளச்சல் அருகே வங்கி பெண் ஊழியரிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியவரை போலீசார் தேடி வருகிறார்கள். இ...
குளச்சல் அருகே வங்கி பெண் ஊழியரிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
குளச்சல் அருகே உள்ள உடையார் விளையை சேர்ந்தவர் ஆட்வின். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜூடிட் சில்வா (வயது 29). இவர் திங்கள் சந்தையில் உள்ள வங்கியில் பணி புரிந்து வருகிறார்.
ஜூடிட்சில்வா வழக்கம் போல் காலை வங்கிக்கு புறப்பட்டு சென்றார். பணி முடிந்து அவர் ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டார்.
அவர், லெட்சுமிபுரம் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் பின் தொடர்ந்து வந்தார். அவர் திடீரென்று, ஜூடிட் சில்வாவின் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.
உடனே அவர் திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் சங்கிலியை பறித்த வாலிபர் மின்னல் வேகத்தில் மோட்டர் சைக்கிளில்தப்பி சென்று விட்டார். இதுபற்றி ஜூடிட் சில்வா குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.
No comments