இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜ...
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் ட்வீட்டர் பக்கத்தில் "பீஸ்ட் அப்டேட் ஆன் தி வே" என கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு ட்வீட்டரில் பதிவிட்டிருந்தார. அனைத்து ரசிகர்களும் படத்தின் ரிலீஸ் தேதி தான் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள் .
ஆனால் "பீஸ்ட்" படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அரபிகுத்து பாடலை தொடர்ந்து ஜாலியா ஜூம்கானா என்ற பாடல் பீஸ்ட் படத்திலிருந்து வெளியாகவுள்ளது. இந்த பாடலை நடிகர் விஜயே பாடியுள்ளார். கு கார்த்திக் என்பவர் பாடலை எழுதியுள்ளார்.
இந்த பாடலை வரும் 19-ஆம் தேதி விஜய் வெளியிடுவதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
No comments