தனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜய் என்று இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலக நாடுகளை...
தனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜய் என்று இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் ஒன்றரை லட்சம் பேரை பலி வாங்கியுள்ளது, இந்த வைரஸ்.

இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தியாவைப் போல இலங்கையும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்திய நடிகர், நடிகைகள் டிசர்ட் சேலஞ்ச், பில்லோ சேலஞ்ச் போல, திடீர் சேலஞ்ச்களை உருவாக்கி வருவது போல, அங்குள்ள பிரபலங்களும் உருவாக்கி வருகின்றனர்.

ராஜபக்சே மகனும் இலங்கை எம்.பி.யுமான நமல் ராஜபக்சேவும் ட்விட்டரில் சேலஞ்ச்சை உருவாக்கியுள்ளார். #7DayChallenge என்ற இந்த சேலஞ்சின் 7வது நாளான நேற்று, அவர் பிகில் படத்தைப் பார்ப்பது போல ஒரு போட்டோவை ட்விட்டரில் பதிந்துள்ளார்.
அதில் நமல் ராஜபக்ச, "7 நாள் சவாலின் கடைசி நாள் இது. பெரும்பாலும் வீட்டில் ரிலாக்ஸாக இருக்கிறேன். எனக்கு எப்போதும் பிடித்த நடிகர்களில் ஒருவரான விஜய்யின் 'பிகில்' படத்தை பார்க்கிறேன். இது எனது பேவரைட் படம். அதை மீண்டும் பார்க்கும்போது, மனைவி லிமினி கையும் களவுமாகப் பிடித்துவிட்டார்' என்று தெரிவித்துள்ளார்.
Really a nice meter of this post. I read your post. Thanks for share your post with us.
ReplyDeleteKala Jadu Specialist Baba Ji