Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மணவாளக்குறிச்சியில் ஏழைகள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் விநியோகம்

மணவாளக்குறிச்சியில் சின்னவிளை பகுதியை சேர்ந்த 25 ஏழை குடும்பங்கள் மற்றும் துப்புரவு பணியார்களுக்கு, காவல்த்துறை மூலமாக அத்தியாவசிய நிவாரண ...

மணவாளக்குறிச்சியில் சின்னவிளை பகுதியை சேர்ந்த 25 ஏழை குடும்பங்கள் மற்றும் துப்புரவு பணியார்களுக்கு, காவல்த்துறை மூலமாக அத்தியாவசிய நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.
இந்த நிவாரண உதவிகளை மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்னவிளை பகுதியை சேர்ந்த தன்னார்வலர் ஜோசப் என்பவர் வழங்கி உள்ளார்.
அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் வைத்து இன்று ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா விழிப்புணர்வு தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர், என்.சி.சி மாணவர்கள், மின்வாரிய ஊழியர்கள் போன்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வக் சாஸ்திரி, இன்ஸ்பெக்டர் தங்கராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் கமலேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் தாரணி, மின்வாரிய உதவி பொறியாளர் குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் ஜோசப் ஆகியோர் செய்திருந்தனர்.
News and Photos
Dyson & Bendan
Manavalakurichi

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்