குளச்சல் மரமடியை சேர்ந்தவர் செல்வன்(வயது 51). மீனவரான இவர், அப்பகுதியில் கராத்தே மாஸ்டராகவும் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் செல்வன் தனது ...
குளச்சல் மரமடியை சேர்ந்தவர் செல்வன்(வயது 51). மீனவரான இவர், அப்பகுதியில் கராத்தே மாஸ்டராகவும் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் செல்வன் தனது மோட்டார் சைக்கிளில் மரமடியில் இருந்து சாஸ்தான்கரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

சாஸ்தான்கரை பகுதியில் சென்றபோது எதிரே குளச்சல் கோணங்காட்டை சேர்ந்த ஜெபின்ராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், செல்வனின் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதைகண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, ஜெபினை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், செல்வனை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி செல்வன் பரிதாபமாக இறந்தார்.
இறந்த செல்வனுக்கு மரிய எட்வின் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments