நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றி கொண்டு டெம்போ ஒன்று நேற்றிரவு களியக்காவிளை நோக்கி புறப்பட்டது. திசையன்விளை...
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றி கொண்டு டெம்போ ஒன்று நேற்றிரவு களியக்காவிளை நோக்கி புறப்பட்டது.


திசையன்விளை காமராஜ் நகரை சேர்ந்த சுயம்பு (வயது 37) டிரைவராக இருந்தார். கிளீனராக அதே பகுதியை சேர்ந்த கீதன் (வயது 24) இருந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் மணவாளக்குறிச்சி பகுதி கூட்டுமங்கலம் அருகே சென்ற போது, டெம்போ கட்டுப்பாட்டை இழந்து சாலையோர டிரான்ஸ்பார்மர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் டெம்போ தலைக்குப்புற கவிழ்ந்தது. டிரான்ஸ்பார்மர் உடைந்து கீழே விழுந்தது. அந்த சமயம் அவ்வழியாக வந்த குளச்சல் ஹைவே போலீசார், மணவாளக்குறிச்சி போலீசாருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீசார் டெம்போவுக்குள் சிக்கிய டிரைவர் மற்றும் கிளீனரை மீட்டனர். இவருவரும் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த விபத்தில் 10 கோழிகள் இறந்தன.
தொடர்ந்து மணவாளக்குறிச்சி போலீசார் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதனிடையே டிரான்ஸ்பார்மர் மீது டெம்போ மோதியதில் பரப்பற்று, மண்டைக்காடு, காட்டுவிளை, கோவிலான்விளை ஆகிய பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டது.
இதனால் மக்கள் அதிகாலையில் தூக்கமின்றி தவித்தனர். மணவாளக்குறிச்சி மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் மணவாளக்குறிச்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments