கர்நாடகாவின் கலாபுராகி அருகே வசிக்கும் குடும்பத்தில் இர்பானா பேகம் என்பவர் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் இவரை பிரசவத்திற்காக அவரது குடும்...
கர்நாடகாவின் கலாபுராகி அருகே வசிக்கும் குடும்பத்தில் இர்பானா பேகம் என்பவர் கர்ப்பமாக இருந்தார்.

இந்நிலையில் இவரை பிரசவத்திற்காக அவரது குடும்பத்தினர் காரில் கலாபுராகியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அவர்கள் சென்ற கார் சவலகி கிராமம் அருகே சாலை விபத்தில் சிக்கியது. அதாவது அவர்கள் பயணித்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் கார் உருண்டு கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். கர்ப்பிணி பெண்ணான இர்பானா பேகம் மற்றும் உறவினர்கள் ரூபியா பேகம், அபேதாபி, ஜெயச்சுனாபி, முனீர், முகமது அலி, சௌகத் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இறந்தவர்கள் அனைவரும் ஆலண்ட் நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கர்ப்பிணிப் பெண்ணை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்க கலபுராகிக்கு வந்து கொண்டிருந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகி 7 பேர் இறந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments