மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். விவசாய விளை பொருள் உற்பத்தி மற்றும...
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

விவசாய விளை பொருள் உற்பத்தி மற்றும் வர்த்தகம் 2020, விவசாய விளை பொருட்களுக்கான விலை உத்தரவாதம் (பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல்) மற்றும் அத்தியாவசிய பொருட்களில் சட்டத்திருத்தம் உள்ளிட்ட மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த மசோதாக்கள் மக்களவையில் கடந்த 15ம் தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கிடையே கடந்த 22ம் தேதி மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே, வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடிதம் அளித்திருந்தனர். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கப்பட்டு, மத்திய அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த 3 மசோதாக்களும் சட்டமாகியுள்ளன.
No comments