ஹெச். ராஜா விரைவில் ஆளுநராக நியமிக்கப்படக் கூடும் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலை தேசியத் த...
ஹெச். ராஜா விரைவில் ஆளுநராக நியமிக்கப்படக் கூடும் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலை தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டார். 70க்கும் மேற்பட்டோர் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை.
தேசிய செயலாளர் பதவியில் இருந்த ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் அந்த பதவி கிடைக்கவில்லை. ஆனாலும் புதிய நிர்வாகிகளுக்கு ஹெச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் ஹெச். ராஜா, ஆளுநராக நியமிக்கப்படக் கூடும் என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், திடீரென தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதே பாணியில் ஹெச். ராஜா ஆளுநராக நியமிக்கப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரளா அல்லது மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஏதேனும் ஒன்றின் ஆளுநராக ஹெச். ராஜா நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
No comments