குளச்சல் அருகே குறும்பனையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். அவரது மகள் ரூபலா (வயது 22). குலசேகரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் பாராமெடிக்கல் இறுதியாண்...
குளச்சல் அருகே குறும்பனையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். அவரது மகள் ரூபலா (வயது 22). குலசேகரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் பாராமெடிக்கல் இறுதியாண்டு படித்து வருகிறார்.

இதேபோல் ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி அடிமை. அவரது மகன் சுஜன் (வயது 24). மீன்பிடி தொழிலாளி. ரூபலா-சுஜன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி ரூபலா வீட்டிலிருந்து மாயமானார். விசாரணையில் சுஜன் வீட்டில் ரூபலா இருப்பதை அறிந்த அவரது பெற்றோர் சுஜனின் வீட்டில் சென்று தகராறில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ரூபலா-சுஜன் குளச்சல் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ரூபலா சுஜனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து போலீசார் அறிவுரை வழங்கி ரூபலாவை, சுஜனுடன் அனுப்பி வைத்தனர்.
No comments