Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

கேரளாவில் காதலர் தினத்தில் திருமணம் செய்து கொண்ட திருநங்கை - திருநம்பி ஜோடி

கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்ட திருநம்பி மனுகார்த்திகா (31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிக...

கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்ட திருநம்பி மனுகார்த்திகா (31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக உள்ளார்.
இதுபோல் கேரள அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டுப் பிரிவில் திட்ட அதிகாரியாக இருப்பவர் சியாமா பிரபா (31). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில், காதலர் தினமான நேற்று திருவனந்தபுரத்தின் இடுப்பாஞ்சியில் உள்ள அழகாபுரியில் வைத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்துக்கு உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த பின் பேசிய சியாமா எஸ் பிரபா, ‘காதலர் தினத்தன்று திருமணம் செய்ய நாங்கள் எந்த முடிவும் செய்யவில்லை.
வழக்கமாக திருமணத்தை பதிவுசெய்யும்போது ஆண், பெண் என்ற அடையாளத்துடன் பதிவு செய்வது வழக்கம். நாங்கள் எங்கள் திருமணத்தை இரு மூன்றாம் பாலினத்தவருக்கு இடையிலான திருமணம் எனபதிவு செய்ய உள்ளோம். அப்படி பதிவு செய்வதில் நாங்கள் வென்றுவிட்டால் இந்தியாவிலேயே முதன்முதலில் அப்படி பதிவு செய்யப்பட்ட திருமணம் இதுதான். எங்களது பெற்றோர்கள் ஜாதகம் பார்த்து இந்த நாளை முடிவு செய்தனர். எல்லா விதமான காதலையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
தற்போது இவர்களின் திருமணம் சட்டப்படி செல்லாது. இருப்பினும் இவர்கள் இதனைச் செல்லுபடியாக அறிவிக்கக் கோரி மாற்ற நீதிமன்றத்தை அணுகவுள்ளனர்.
இந்தக் காதல் தம்பதியினர் தங்கள் திருமண விழாவில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். நாட்டில் திருநங்கைகளின் வளர்ச்சியில் தங்கள் திருமணம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று கூறினர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...