கேரளாவில் உள்ள வெண்ணைகாடு பகுதியைச் சேர்ந்த மம்மிக்கா என்ற தினக்கூலித் தொழிலாளி தற்போது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது....
கேரளாவில் உள்ள வெண்ணைகாடு பகுதியைச் சேர்ந்த மம்மிக்கா என்ற தினக்கூலித் தொழிலாளி தற்போது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.
தனிப்பட்ட குணங்களைக் கொண்ட எவரும் ஒரே இரவில் நட்சத்திரமாகவோ அல்லது பிரபலமாக மாறலாம். பல சாதாரண மனிதர்கள் அவர்களின் பாடல், நடனத் திறமையால் வைரலாவதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்தவர் கேரளாவை சேர்ந்த 60 வயதான மம்மிகா.
மங்கிப்போன லுங்கியும், நிறம் மாறிய பழைய சட்டை கொண்ட மம்மிகா சமீபத்தில் ஆடை அணியும் நிறுவனத்திற்கான விளம்பர போட்டோஷூட்டை முடித்துள்ளார். கொடிவள்ளி கிராமத்தை சேர்ந்த மம்மிக்கா, சொந்த ஊரில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் தற்போது ஹீரோவாக வலம் வருகிறார்.
தினசரி கூலித் தொழிலாளியான இவர் மிக குறைந்த சம்பளத்திற்கு இவை தினக்கூலி வேலை பார்த்து வந்து இருக்கிறார். இவரின் தோற்றத்தில் ஒரு கெத்து இருப்பதை அப்பகுதி போட்டோ கிராபர் ஷரீக் பார்த்துள்ளார். பின்னர், மம்மிக்காவிடம் உங்களை வைத்து மாடல் சூட் எடுக்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தார். முதலில் மம்மிக்கா இதற்கு மறுத்துள்ளார்.
பின்னர், எப்படியோ அவரை சம்மதிக்க வைத்துள்ளனர். கோட் போட்டு மம்மிக்காவை எடுத்த போட்டோ தான் தற்போது இணையம் முழுக்க வைரலாகி பரவி வருகிறது.
No comments