தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு விழா நிழ்ச்சியில் ஞானப்புகழ்ச்சி பாடுதல் விடிய, விடிய நடந்தது. தக்கலை ஞானமாமேதை பீர்முகமத...
தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு விழா நிழ்ச்சியில் ஞானப்புகழ்ச்சி பாடுதல் விடிய, விடிய நடந்தது.
தக்கலை ஞானமாமேதை பீர்முகமது சாகிபு ஆண்டு விழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் போது தினமும் இரவு மவுலீது ஓதுதல், மார்க்கப் பேருரைகள், ஆலிம்கள் அரங்கம், ஞானப்புகழ்ச்சி புதிய பதிப்பு வெளியீடு, ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான பீர்முகமது சாகிபு அவர்கள் எழுதிய ஞானப்புகழ்ச்சி பாடுதல் நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. பீர்முகமது அப்பா நினைவிடம் அருகில் ஜமாஅத் மக்கள் ஒன்றிணைந்து ஞானப்புகழ்ச்சியில் உள்ள 686 பாடல்களை கூட்டாக பாடினர்.
இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (17-ம் தேதி) மாலை 4:30 மணிக்கு பொது நேர்ச்சை வழங்கப்படும். 18-ம் தேதி இரவு 7 மணிக்கு 3-ம் சியாரத் நேர்ச்சை வழங்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை அஞ்சுவன்னம் பீர்முஹம்மதியா முஸ்லிம் அசோசியேஷன் தலைவர் அப்துல் ஜப்பார், செயலாளர் ஹாமீம் முஸ்தபா, பொருளாளர் முகமது ரபீக், துணை தலைவர் முகமது சலீம், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரசாக், பீர்முகமது, முஹம்மது ரசீது, சத்தார், சாகுல் ஹமீது, யாசீன், ரயீஸ் சுபுஹான் மற்றும் விழாக்குழு தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் நஸ்ருதீன் துணை செயலாளர் நிஜாமுத்தீன், பொருளாளர் ஆரிபீன், பூபந்தல் குழு தலைவர் சித்திக் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
No comments